ராசிக்கின் காலில் விழுந்த சாரா புலஸ்தினியின் தாயார் கவிதா! அதிரப்போகும் புலனாய்வாளர்களின் கைது
கல்வியில் சிறந்து விளங்கிய சாரா புலஸ்தினி, அஸ்த்தும் என்ற முஸ்லிம் இளைஞனால் கடத்தி செல்லப்பட்டதாக அவரது தாயார் கவிதா கூறுகின்றார்.
குறித்த அஸ்த்தும் என்ற நபரே உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நீர்கொழும்பில் தாக்குதல் நடத்தியவர் என தெரிவிக்கப்படுகின்றது.
இதன் பின்னர் இந்துவாக இருந்த தனது மகள் புலஸ்தினியை ராசிக் என்ற நபர், முஸ்லிமாக மதம் மாற்றியதாக புலஸ்தினியின் தாயார் தெரிவிக்கின்றார்.
இதனையடுத்து, ராசிக்கை கொழும்பில் நேரில் சந்தித்து பேசிய போது, அவர் புலஸ்தினியை திருமணம் செய்யப்போவதாக அவரது தாயாரிடம் கூறியுள்ளார்.
இதன்போது, தனது மகள் மருத்துவராக வேண்டும் என்ற இலட்சியத்தில் கல்வி பயில்வதாகவும் அவரை விட்டுவிடுமாறும் புலஸ்தினியின் தாயார் கோரியுள்ளார்.
எனினும், இருவரும் 18 வயது தாண்டியவர்கள் என்பதால் அது அவர்களின் உரிமையாக கருதி இருவருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
மகளின் திருமணம் குறித்து அறியாமல் மீண்டும் ராசிக்கின் காலில் விழுந்து தனது மகளை தன்னுடன் அனுப்புமாறு கோரியதாக தாயார் கவிதா தெரிவிக்கின்றார்.
எனினும், அவர்களுக்கு திருமணம் நடந்துவிட்டதாக புலஸ்தினியின் தாயார் கவிதாவுக்கு கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கவிதா வெளிநாட்டிற்கு சென்றவுடன், தனக்கு ராசிக்குடன் வாழ முடியாது எனவும் அவருக்கு பல தவறான உறவுமுறைகள் இருப்பதாகவும் புலஸ்தினி தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri
