தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுக்கப் போவதாக விஜய் சூளுரை
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காகவும் குரல் கொடுக்கப் போவதாக தமிழக முன்னேற்ற கழக கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது விஜய் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது தனது கடமை எனவும் தெரிவித்துள்ளார்.
திராவிட கட்சிகள்
திராவிட கட்சிகள் போன்று அறிக்கைகள் மட்டும் வெளியிட்டு ஈழத்தமிழர்களை ஏமாற்றால் அவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இருந்தாலும் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்களுக்காக குரல் கொடுக்கப் போவதாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் மேலும் தெரிவித்துள்ளார்.
இதுவரை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்து வந்த நிலையில், முதன்முறையாக விஜய் தனது நிலைப்பாட்டை இன்று வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



