மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு
தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக, 4 மாவட்டங்களில் விடுக்கப்பட்டிருந்த முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நீடித்துள்ளது.
இந்த எச்சரிக்கை ஒக்டோபர் 31ஆம் திகதி மாலை 4.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகள்

நுவரெலியா மாவட்டம் : அம்பகமுவ கோரளை
இரத்தினபுரி மாவட்டம் : அயகம, ஒபநாயக்க, எலபாத்த, குருவிட்ட, பெல்மதுளை மற்றும் இரத்தினபுரி
கண்டி மாவட்டம் : உடுநுவர மற்றும் யட்டிநுவர
கேகாலை மாவட்டம் : அரநாயக்க, யட்டியாந்தோட்டை, புலத்கொஹுபிட்டிய மற்றும் மாவனெல்லை
மழை தொடர்வதால், குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும், மண்சரிவு அபாய அறிகுறிகள் தென்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இடியுடன் கூடிய மழை
மேலும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பின்படி, இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக மேல் மாகாணம், சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் மழை பெய்யும் வாய்ப்பு அதிகமாகக் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது மின்னல் தாக்கம் மற்றும் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்றினால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
]