மோசமான வானிலை: பதுளையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - மேலும் பலர் மாயம்
கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
பலர் காணாமல்போயுள்ளதாகவும் தெரியவருகிறது.
முதலாம் இணைப்பு
பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகளில் பலர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலையை அடுத்து இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
மாவட்ட செயலாளரின் தகவல்
இது தொடர்பில் பதுளை மாவட்ட செயலாளர் பண்டுக அபேவர்தன கூறுகையில்,
பதுளை மாவட்டத்தில் பதிவான ஆறு நிலச்சரிவு சம்பவங்களில் சுமார் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் ஒன்பது பேர் காணாமல் போயுள்ளனர்.

தேடுதல் பணி தீவிரம்
நேற்று (26) நிலவிய மோசமான வானிலை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகளில் பல நிலச்சரிவுகள் மற்றும் மண் சரிவுகள் பதிவாகியுள்ளன.
இந்த நிலையில் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளை நிவாரணக் குழுக்கள் தொடர்கின்றன என தெரிவித்துள்ளார்.