காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் தீவிரமடையும் சாத்தியம் - முழு நாட்டிற்கும் சிவப்பு எச்சரிக்கை
இலங்கைக்குத் தென்கிழக்கே நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மட்டக்களப்பிலிருந்து தென்கிழக்கு திசையில் சுமார் 210 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாழ்வு மண்டலம் வடக்கு நோக்கிச் சாய்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணித்தியாலங்களுக்குள் ஆழமான தாழ்வு மண்டலமாக மேலும் தீவிரமடைய அதிக வாய்ப்புள்ளது.
கனமழை மற்றும் பலத்த காற்று நிலைமை
இந்த அமைப்பின் தாக்கம் காரணமாக, நாட்டில் நிலவும் கனமழை மற்றும் பலத்த காற்று நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்படும் எதிர்கால எச்சரிக்கைகளுக்கு கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் 200 மி.மீற்றருக்கும் அதிகமான மிக கனமழை பெய்யக்கூடும், வடக்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேற்கு மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் 150 மி.மீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்.
மக்களுக்கு அறிவுறுத்தல்
நாட்டின் பிற பகுதிகளில் சில இடங்களில் 100 மி.மீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது (60-70) கி.மீற்றர் வேகத்தில் மிக பலத்த காற்று வீசக்கூடும். கனமழை மற்றும் பலத்த காற்றினால் ஏற்படும் விபத்து அபாயங்களைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு திணைக்களம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
ஒரு REEL-க்கு ரூ. 76 லட்சம் சம்பளம்.. ஓரியின் வருமானத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் Cineulagam