க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைப்பு..
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக, 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (உயர் தர) பரீட்சை இரண்டு நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக்க லியனகே விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு
இதற்கமைய, இன்றைய தினம்(27) மற்றும் நாளைய தினம்(28) ஆகிய இரு தினங்களிலும் பரீட்சை நடைபெறாது என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய பரீட்சைத் திகதிகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், அனைத்து மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பிராந்திய சேகரிப்பு மத்திய நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், ஒருங்கிணைப்பு அதிகாரிகள் மற்றும் பரீட்சை நிலையப் பொறுப்பதிகாரிகள் ஆகியோர், பரீட்சை ஒருங்கிணைப்பு மையங்களில் வைக்கப்பட்டுள்ள வினாத்தாள்களின் பாதுகாப்பில் சிறப்புக் கவனம் செலுத்துமாறு வலியுறுத்தி அறிவிப்பு ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
பாண்டி திருமண பிரச்சனையில் நிலா சோழனுடன் வாழ்வது குறித்து எடுத்த அதிரடி முடிவு... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
எப்ஸ்டீன் கோப்புகளில் அறிவியலாளரின் முகம் சுழிக்கும் புகைப்படம்: கோபத்துடன் விளக்கமளித்த குடும்பம் News Lankasri
இராணுவத்தைக் குவிக்கும் அமெரிக்கா... கப்பல்களில் எண்ணெய் நிரப்புவதை தீவிரப்படுத்தும் ஈரான் News Lankasri