முழு இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இயற்கை ஆபத்துகள் குறித்த வானிலை அவதான நிலையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று 08.30 மணியளவில் விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை அறிக்கை நாளை இரவு 8.30 மணி வரை செல்லுப்படியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான சூழ்நிலைகள்
அனைத்து மாவட்டங்களும் தற்போது கடுமையான மழை காரணமாக அதிக ஆபத்தில் உள்ளன.

திடீர் வெள்ளம், மண் சரிவுகள், ஆறுகள் நிரம்பி வழிகின்றன, பலத்த காற்று மற்றும் ஆபத்தான சூழ்நிலைகள் தொடர்பில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.