உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரில் ஈரான் பங்கேற்பது குறித்து வெளியான தகவல்
இந்த ஆண்டு நடைபெறவுள்ள பீஃபா உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளில் ஈரானின் ஆண்கள் தேசிய கால்பந்து அணி பங்கேற்கும் நிலையில் இல்லை என்று அந்த நாட்டின் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் அஹ்மத் துன்யமாலி தெரிவித்துள்ளார்.
உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதற்கான பொருத்தமான சூழல் எந்தவொரு நிலையிலும் எம்மிடம் இல்லை.
பங்கேற்பதற்கான வாய்ப்பு
எமது வீரர்கள் பாதுகாப்பாக இல்லை. எனவே, போட்டியில் பங்கேற்பதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது நிலவவில்லை.

கடந்த எட்டு அல்லது ஒன்பது மாதங்களில், இரண்டு போர்கள் எம்மீது திணிக்கப்பட்டுள்ளன.
இதில் எமது மக்களில் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டு தியாகிகளாக்கப்பட்டுள்ளனர். எனவே, பங்கேற்பதற்கான வாய்ப்பு நிச்சயமாக இல்லை என தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஈரானிய கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் மெஹ்தி தாஜ், இதேபோன்ற கருத்தை முன்வைத்துள்ளார்.
இம்முறை உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரை அமெரிக்கா, மெக்ஸிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri
சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் த்ரிஷா! மே குறித்து என்ன சொல்லியுள்ளார் தெரியுமா? Manithan
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri