தையிட்டி விகாரையை அகற்றக்கோரி காணி உரிமையாளர்கள் போராட்டம்
யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையினால் சுவீகரிக்கப்பட்ட தமது சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டமானது நேற்று(27.08.2026) இடம்பெற்றுள்ளது.
காணி விடுவிக்கக் கோரி போராட்டம்
இந்த விகாரை அமைந்துள்ள பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள தனியார் காணிகளை எந்தவித தாமதமுமின்றி உரிய காணி உரிமையாளர்களிடம் உடனடியாக மீள வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் காணி உரிமையாளர்கள் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் தொடர்ச்சியாக இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை வேளையில் ஆரம்பித்த இந்தப் போராட்டம், நேற்று மாலை வரை இரண்டு நாள்களாகத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தமக்குரிய சொந்தக் காணிகளை முழுமையாக மீளப் பெறும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என்றும் காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri