இரகசிய தகவலில் அழகு பராமரிப்பு நிலையமொன்றில் சிக்கிய தம்பதியினர்! விசாரணையில் வெளியான தகவல்
மாத்தறை தொடருந்து நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு பராமரிப்பு நிலையமொன்றில் இருந்து, சுமார் ஏழு கோடி ரூபா மதிப்புள்ள ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒரு தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரகசியத்தகவலின் அடிப்படையில் நேற்று (27) தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அழகு நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மாத்தறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலை
மாத்தறை, வெலகொடவைச் சேர்ந்த 30 வயது சந்தேகநபரிடமிருந்து 2.45 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 50 கிராம் ஐஸ் போதைப்பொருளும், அவரது 26 வயது மனைவியிடமிருந்து 6 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டன.

மேலும், போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 625,000 ரூபாய், இரண்டு மின்னணு தராசுகள் மற்றும் நான்கு கைபேசிகள் ஆகியவையும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஒரு கிராம் ஹெரோயின் 25,000 ரூபாய்க்கு விற்கப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
மேலும், சந்தேகத்திற்குரிய தம்பதியினர் சில காலமாக இந்த போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய தம்பதியினர் நாளை (28) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளனர்.
உலக அளவிலும் தமிழ்நாட்டிலும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
தண்ணீர் மற்றும் டின் உணவுகளைச் சேமித்து வைக்குமாறு மக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்தல் News Lankasri