திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் நீண்டகால குத்தகைக்கு வழங்க நடவடிக்கை - வெளியான அறிவிப்பு
திருகோணமலை எண்ணெய் தாங்கிகளில் பராமரிக்காமல் கைவிடப்பட்டுள்ள 29 எண்ணெய் தாங்கிகளை நீண்டகால குத்தகை அடிப்படையில் தனியார் முதலீட்டாளர்களுக்கு வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான தகவல்களை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திக்குமார அறிவித்துள்ளார்.
திருகோணமலை எண்ணெய் தாங்கி மறுசீரமைப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பராமரிக்கப்படாமல் 29 தாங்கிகள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
திருகோணமலை எண்ணெய் தாங்கிகளில் இலங்கை பெற்றோலியகூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான எண்ணெய் தாங்கிகளை மறுசீரமைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பெற்றோலிய டேர்மினல் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான 61 தாங்களில் 29 தாங்கிகள் முறையாக பராமரிக்கப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.

விண்ணப்பங்கள் கோரல் நடவடிக்கை
இந்த 29 தாங்கிகளை நீண்டகால குத்தகை அடிப்படையில் தனியார் முதலீட்டாளர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன, வெகுவிரைவில் அந்த பணிகள் நிறைவுப்படுத்தப்படும்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கண்காணிப்புக்கு அமைவாக 2 தாங்கிகள் முழுமையாக புனரமைக்கப்பட்டுள்ளன. 3 தாங்கிகள் தற்போது புனரமைக்கப்பட்ட வண்ணம் காணப்படுகின்றன.
இவை அனைத்தும் வெகுவிரைவில் நிறைவுப்படுத்தப்படும். திருகோணமலை எண்ணெய் தாங்கிகளில் இருந்து உச்ச பயனை பெற்றுக்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலும் அதற்குரிய ஒத்துழைப்புக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.
காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தில் யார் குற்றம் செய்திருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் - டக்ளஸ் வலியுறுத்தல்
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11 Evening