17 வருடங்களாகியும் நீதி கிடைக்காமல் அவதியுறும் முல்லைத்தீவு மக்கள் - அதிகாரிகளுக்கு ஆளுநர் விசேட வேண்டுகோள்

Sri Lankan Tamils Mullaitivu Sri Lankan Peoples Sri Lanka Government Nagalingam Vedanayagam
By Rakesh Jun 24, 2026 08:17 AM GMT
Report

போர் முடிந்து 17 ஆண்டுகள் ஆகியிருந்தாலும், இன்னமும் எங்கள் மக்களின் காணிப் பிரச்சினைகளை எவ்வளவு காலத்துக்கு நாம் இழுத்தடிக்கப் போகின்றோம், பாதிக்கப்பட்டவர்கள் எமது முல்லைத்தீவு மக்கள் என்ற உணர்வோடு அவர்களுக்கு உதவிச் செய்ய வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்தின் ஏற்பாட்டில், முல்லைத்தீவு மாவட்டத்தின் “5 ஆண்டுச் செயலாற்றுகை” தொடர்பான விசேட மீளாய்வுக் கூட்டம், கிளிநொச்சியில் அமைந்துள்ள வடக்கு மாகாண காணி ஆணையாளர் அலுவலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று(23.06.2026) ஆளுநர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களம் நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு மக்களின் முதன்மையான பிரச்சினை

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இறுதிப் போரின் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலிருந்த காணி ஆவணங்கள் முற்றாக அழிவடைந்துள்ளன. மக்களின் தனிப்பட்ட ஆவணங்களும் போரால் தொலைந்து போய்விட்டன.

17 வருடங்களாகியும் நீதி கிடைக்காமல் அவதியுறும் முல்லைத்தீவு மக்கள் - அதிகாரிகளுக்கு ஆளுநர் விசேட வேண்டுகோள் | Land Issue Of People Of Mullaitivu Not Resolved

போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்த நிலையிலும், எமது மக்கள் தமக்கான காணி உறுதிப்பத்திரங்களுக்காக இன்னமும் அலைந்து திரிகின்றார்கள்.

இந்த மக்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து, அவற்றை விரைவாகத் தீர்த்து வைப்பதற்காகவே மாகாண காணி ஆணையாளர் இ.குருபரனின் எண்ணக்கருவில் இந்த விசேட செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

தீர்க்கப்படாத மக்கள் பிரச்சினைகளில் ஒன்று

இந்தத் திட்டத்தின் வெற்றிக்கு மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், குடியேற்ற உத்தியோகத்தர்கள், காணி வெளிக்களப் போதனாசிரியர்கள், காணி அலுவலர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என அனைவரதும் முழுமையான ஒத்துழைப்பு அவசியமாகும்.

17 வருடங்களாகியும் நீதி கிடைக்காமல் அவதியுறும் முல்லைத்தீவு மக்கள் - அதிகாரிகளுக்கு ஆளுநர் விசேட வேண்டுகோள் | Land Issue Of People Of Mullaitivu Not Resolved

இருப்பினும், இந்த திட்டத்தின் முன்னேற்றம் எதிர்பார்த்த மட்டத்தில் இல்லை என்பது கவலையளிக்கின்றது. இந்தக் காணிப் பிரச்சினைகளை நாம் விரைவாகத் தீர்க்காவிட்டால், மக்கள் தினமும் பிரதேச செயலகம், மாவட்ட செயலகம் மற்றும் எனது அலுவலகம் எனத் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருப்பார்கள்.

மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டும் என்ற அதியுயர் பொறுப்புணர்வுடன் களமட்ட உத்தியோகத்தர்கள் செயற்பட வேண்டும் என்றார்.

நிலுவையில் 198, 751 காணி விவகாரங்கள்

இதன்போது கருத்துத் தெரிவித்த மாகாண காணி ஆணையாளர் இ.குருபரன், வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 198, 751 காணி தொடர்பான விடயங்கள் தீர்க்கப்பட வேண்டியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்த இலக்கை அடைவதற்காக ஆளுநரின் அனுமதியுடன் ஆளணிச் சீராக்கத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும், இந்த விசேட செயற்றிட்டத்துக்கான கொடுப்பனவுகளுக்கு ஆளுநர் அனுமதியளித்தமைக்காகத் தனது நன்றிகளையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

17 வருடங்களாகியும் நீதி கிடைக்காமல் அவதியுறும் முல்லைத்தீவு மக்கள் - அதிகாரிகளுக்கு ஆளுநர் விசேட வேண்டுகோள் | Land Issue Of People Of Mullaitivu Not Resolved

மேலும், அதிகாரிகளின் தாமதங்களால் காணி தொடர்பான நடவடிக்கைகளில் ஏற்படும் சுணக்கம் காரணமாக, மாகாணத்துக்கான பெருமளவு வருமானம் இழக்கப்படுவதாகவும் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் பின்னர் ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவு ரீதியாகவும் செயற்றிட்டத்தின் முன்னேற்றங்கள் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டன.

அதிகாரிகள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கை 

பின்னடைவுகளுக்கான காரணங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டதுடன், தொடர்புடைய அதிகாரிகளிடம் உரிய விளக்கங்களும் கோரப்பட்டன.

தொடர்ந்து பின்னடைவைக் காண்பிக்கும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான யோசனையையும் மாகாண காணி ஆணையாளர் முன்வைத்துள்ளார்.

17 வருடங்களாகியும் நீதி கிடைக்காமல் அவதியுறும் முல்லைத்தீவு மக்கள் - அதிகாரிகளுக்கு ஆளுநர் விசேட வேண்டுகோள் | Land Issue Of People Of Mullaitivu Not Resolved

எதிர்காலத்தில் இந்தச் செயற்றிட்டத்தை மிகத் துரிதமாக முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுத்த ஆளுநர், பிரதேச செயலாளர்கள் ஒவ்வொரு வாரமும், மாவட்டச் செயலாளர் மாதாந்தமும் இதன் முன்னேற்றங்களை மீளாய்வு செய்ய வேண்டும் என உறுதியான அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

இந்த உயர்மட்டக் கலந்துரையாடலில், முல்லைத்தீவு மேலதிக மாவட்ட செயலாளர் (காணி), பிரதேச செயலாளர்கள், குடியேற்ற உத்தியோகத்தர்கள், காணி வெளிக்களப் போதனாசிரியர்கள், காணி அலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.  

கனடாவில் இருந்து வந்த யுவதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

கனடாவில் இருந்து வந்த யுவதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

அதிகாலை வங்கியை உடைத்து பெருந்தொகை தங்க நகைகள் கொள்ளை! விசாரணையில் வெளியான தகவல்

அதிகாலை வங்கியை உடைத்து பெருந்தொகை தங்க நகைகள் கொள்ளை! விசாரணையில் வெளியான தகவல்


10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US