கனடாவில் இருந்து வந்த யுவதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
இலங்கை வந்த கனேடிய யுவதி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 35 கிலோ 264 கிராம் ஹஷீஷ் போதைப்பொருளுடன் சந்தேக நபரான யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் இந்த போதைப்பொருள் தொகுதி கைப்பற்றப்பட்டுள்ளது.
கனேடிய யுவதி கைது
இதன் பெறுமதி 35 கோடி ரூபாவிற்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

டுபாயில் இருந்து வருகை தந்த 18 வயதுடைய கனேடிய யுவதி ஹஷீஷ் போதைப்பொருள் தொகையை நாட்டிற்குள் கடத்தி வந்துள்ளார் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
YOU MAY LIKE THIS VIDEO