காணி வர்த்தமானி இரத்து விவகாரம்.. கஜேந்திரகுமாரிடம் நீதியமைச்சர் கூறிய தகவல்

Gajendrakumar Ponnambalam Ministry of justice Sri lanka Harshana Nanayakkara
By Rakesh Jun 10, 2025 12:18 AM GMT
Report

வடக்கு மாகாணத்தில் உள்ள காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்படும் திகதி தொடர்பில் காணி அமைச்சர் லால் காந்தவுடன் கலந்துரையாடியதன் பின்னர் அறிவிப்பதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகள் 3 மாத காலத்துக்குள் எவரும் உரிமை கோராது விடின், அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தப்படும் என அரசின் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி பிரசுரிக்கப்பட்ட 2430 எனும் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இருப்பினும், அந்த வர்த்தமானி அறிவித்தலை முழுமையாக இரத்துச் செய்ய வேண்டும் எனக் கோரி வலுப்பெற்ற எதிர்ப்பை அடுத்து, அந்த வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்வதற்கு அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதனை இரத்துச் செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வரை வெளியிடப்படவில்லை.

யாழ். மத்திய பகுதியில் நோய்பரவும் அபாயம்.. அதிகாரிகளின் அலட்சிய போக்கு

யாழ். மத்திய பகுதியில் நோய்பரவும் அபாயம்.. அதிகாரிகளின் அலட்சிய போக்கு

வர்த்தமானி அறிவித்தல் 

அதேபோன்று பிரதமருக்கும் வடக்கு - கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்ப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பின் போது காணி அமைச்சர் லால் காந்தவால் வாக்குறுதியளிக்கப்பட்டவாறு கடந்த 3ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது இந்த விவகாரம் பற்றி எந்தவொரு விசேட கூற்றும் வெளியிடப்படவில்லை.

காணி வர்த்தமானி இரத்து விவகாரம்.. கஜேந்திரகுமாரிடம் நீதியமைச்சர் கூறிய தகவல் | Land Gazette Cancellation Date Justice Minister

இவ்வாறானதொரு பின்னணியில் இந்த வர்த்தமானி அறிவித்தல் எப்போது இரத்துச் செய்யப்படும் எனக் குறித்த திகதியொன்றை அறிவிக்குமாறு குறுந்தகவல் ஊடாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் தான் கோரியிருப்பதாகவும், இது பற்றி நேற்று திங்கட்கிழமை பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் பேசவிருப்பதாகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடந்த சனிக்கிழமை ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை இது பற்றி கஜேந்திரகுமார் எம்.பியிடம் ஊடகங்கள் வினவியபோது, இந்த விடயம் தொடர்பில் காணி அமைச்சர் லால் காந்தவுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தனது குறுந்தகவலுக்குப் பதில் அனுப்பியிருப்பதாகக் குறிப்பிட்டார்.

அத்தோடு இந்த விடயம் தொடர்பில் பிரதமரின் செயலாளருக்கும் தெரியப்படுத்தியிருப்பதாகவும், அவரும் இது குறித்து உடனடியாக ஆராய்வதாக உறுதியளித்திருப்பதாகவும் கஜேந்திரகுமார் எம்.பி. கூறினார். 

கனடாவில் வேலை செய்வோருக்கு மகிழ்ச்சி செய்தி: வழங்கப்படவுள்ள கொடுப்பனவு

கனடாவில் வேலை செய்வோருக்கு மகிழ்ச்சி செய்தி: வழங்கப்படவுள்ள கொடுப்பனவு

கஜேந்திரகுமார் உள்ளிட்ட பலருக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு..!

கஜேந்திரகுமார் உள்ளிட்ட பலருக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு..!

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வெள்ளவத்தை

01 Nov, 2022
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வெள்ளவத்தை

30 Oct, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US