வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் சிக்கிய பிரபல நடிகை
இலங்கையில் நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர்களாக முன்னணி நடிகையான தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவரும் பெயரிடப்பட்டுள்ளனர்.
3 மில்லியன் ரூபாய்க்கு மேல் மோசடி செய்த வழக்கில் அவர்கள் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று கொழும்பு கோட்டை பிரதான நீதவான் திலின கமகேவிடம் தெரிவித்தது.
இருவருக்கு எதிராக போதிய சாட்சியங்கள் இருந்தால் மட்டும் சந்தேகநபர்களாக பெயரிடுமாறு நீதவான் விடுத்துள்ள உத்தரவிற்கமைய, குற்றப் புலனாய்வு திணைக்களம், சம்பவத்தில் சந்தேக நபர்களாக பெயரிடப்படுவதாக நீதவானிடம் தெரிவித்தது.
தமிதா அபேரத்ன
சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தம்மை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதால், தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவரும் தமக்கு தேவையான பிணையை வழங்குமாறு சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் கோரியிருந்தனர். இது தொடர்பில் நீதிமன்றில் எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நடிகை தமிதா அபேரத்னவையும் அவரது கணவரையும் நேற்றைய தினமாக ஆறாம் திகதி வரை கைது செய்ய தடை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் நேற்று முன் பிணை வழங்கியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |