வெப்பமான வானிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மாலையில் அல்லது இரவில் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியை தவிர நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்றைய தினத்திற்கான (07.03.2024) காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வெப்பமான வானிலை
இதேவேளை வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், இரத்தினபுரி மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் நிலவும் வெப்பமான வானிலை தொடர்பில் எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று குறித்த பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்ப சுட்டெண் அதாவது வெப்பம், அவதானம் செலுத்த வேண்டிய நிலையில் காணப்படுவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழர் விட்டுக்கொடுப்பு அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் 9 மணி நேரம் முன்
விரைவில் திருமணம் செய்யப்போகும் அனிருத் - காவ்யா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Cineulagam
ஜனநாயகன் திரைப்படத்தில் இத்தனை காட்சிகள் நீக்கப்படுகிறதா? வெளிவந்த தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி Cineulagam