வடக்கு மாகாண சிறுபான்மையினர் தொடர்பில் ஐ.நாவில் வாய்மொழி அறிக்கை
அறிக்கை வடக்கு மாகாணத்தில் உள்ள மத சிறுபான்மையினர் பற்றி ஐக்கிய நாடுகள் சபையில் வாய்மொழி அறிக்கை ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை பாக்ஸ் ரோமானா மற்றும் முல்லைத்தீவு சுற்றாடல் மற்றும் சமூக மேம்பாட்டு அமைப்பின் சார்பாக பிரசாந்த் கணபதியால் நேற்றையதினம் (06.03.2024) வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் சிங்கள மக்களின் அத்துமீறிய நடவடிக்கை குறித்தும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
பௌத்த மேலாதிக்கம்
குறிப்பாக இலங்கையில் பௌத்த ஆக்கிரமிப்பும் அதன் அதிகாரமும்தான் காணப்படுவதாகவும் முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலை, நீராவியடிப்பிள்ளையர் ஆலயத்தின் இடம்பெற்ற பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவினைமீறியும் குருந்தூர்மலையில் கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு விகாரை என்பன
இலங்கையில் பௌத்த மேலாதிக்கத்தினை எடுத்துகாகட்டுகின்றது என்றும் அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 55வது அமர்விலே இந்த அறிக்கை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |