யாழ்.கோம்பயன் மணல் மயானத்தில் எரியூட்டி அமைக்க நடவடிக்கை
எதிர்வரும் மூன்று மாதங்களில் கோம்பயன் மணல் மயானத்தில் மருத்துவக் கழிவுகளை எரிப்பதற்கான எரியூட்டி செயல்படுத்தப்படும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நேற்றையதினம் (12.08.2023) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கோம்பயன் மணல் மயானத்தில் எரியூட்டி அமைப்பதற்காக யாழ்.மாநகர சபையோடு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உரிய காணிப்பகுதியை தெரிவு செய்யப்பட்டு இருக்கிறது.
குறித்த காணிப்பகுதி சீரமைக்கப்பட்டு மதில் சுவர் பகுதி அமைக்கப்பட்டு எரியூட்டி இயந்திரம் பொருத்தப்பட இருக்கிறது.
மூன்று மாதங்களில் செயல்படுத்த நம்பிக்கை
ஆகவே அது எதிர்வரும் மூன்று மாதங்களில் செயல்படுத்தப்படும் என நம்புகின்றேன். அதற்கு முன்னதாக தெல்லிப்பழை மற்றும் ஏனைய வைத்தியசாலைகளிலும் எறியூட்டிகள் செயல்படும் இடங்களில் மருத்துவக் கழிவுகள் எரிக்கப்படுகின்றன.
மருத்துவக் கழிவுகள் அளவுக்கு அதிகமாகின்ற போது தெற்கு பகுதிகளில் இருக்கின்ற தனியார் எரியூட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக கோம்பயன் மயானத்தில் மனித உடல்களை முறையாக அப்புறப்படுத்தமையால் நாய்கள் இழுத்துச்செல்லும் அவலம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
