ஷானி அபேசேகரவிற்கு பிழையான பதவி.. விமல் வீரவன்ச பகிரங்கம்
குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிற்கு அரசாங்கம் பிழையான பதவியை வழங்கியுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஷானி அபேசேகரவிற்கு நல்ல கதை, திரைக்கதை எழுதி இயக்கக்கூடிய திறமை உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.
திகிலூட்டக் கூடிய க்ரைம் தில்லர் கதைகளை சொல்வதற்கு ஷானிக்கு முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
திரைப்பட இயக்கம்..
இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் ஓர் பதவியை வழங்குவதை விட திரைப்படமொன்றை இயக்குவதற்கு அரசாங்கம் சந்தர்ப்பம் வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இவ்வாறான திரைப்படங்களை இயக்குவதற்கு சந்தர்ப்பம் வழங்கினால் அந்த திரைப்படங்கள் வசூல் சாதனை படைக்கும் என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஷானி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினை விடவும் திரைத்துறைக்கே மிகவும் பொருத்தமானவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட பொது விமல் வீரவன்ச இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




