ஐ.நாவில் இலங்கை விடயத்தில் பிரித்தானியாவின் அதிர்ச்சி முடிவு!
இலங்கை விடயத்தில் பிரித்தானியா ஒரு சூழ்ச்சிகரமான வேலையை செய்திருப்பதாக மூத்த ஊடகவியலாளர் கோபிநாத் ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தங்களுடைய புவிசார் தேவைக்காக இலங்கைக்கு இடமளிப்பது போன்ற ஒரு முன்மொழிவையே அவர்கள் வரைவில் முன்வைத்துள்ளனர்.
இந்த வரைவை இன்னும் பலவீனப்படுத்த இலங்கை விரும்புகின்றது. இது இன்னும் சிக்கலான நிலையை தோற்றுவித்துள்ளது.
இவ்வாறிருக்க, ஜெனீவா அமர்வில் தமிழர்களுக்கான நீதி வழங்கும் பொறிமுறையை பலவீனப்படுத்தும் விதமாகவே வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தின் உரை அமைந்திருந்ததாக கோபிநாத் ஜெயச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
விஜித ஹேரத்தின் உரையில் பல விடயங்களை அவர் நிராகரித்தே பேசியிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்ளக விசாரணையில் நாம் நீதியை வழங்கி விடுவோம் எனவும் உறுப்பு நாடுகள் எங்களுக்கு உதவிகளை செய்தால் மட்டும் போதுமானது என்ற கருத்தையே அவர் முன்வைத்துள்ளார்.
அதாவது தொழில்நுட்ப உதவியை மட்டும் பெற்றால் போதுமானது என்ற நிலைப்பாட்டில் அவர் இருப்பதாக கோபிநாத் ஜெயச்சந்திரன் கூறியுள்ளார்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri
பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியினருக்கு ஆண் குழந்தைகள் பிறப்பு அதிகம்: சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள விடயம் News Lankasri
துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri