யாழில் மூடப்படாத மனித புதைகுழி: உடல்களை நாய்கள் இழுத்துச் செல்லும் அவலம்
யாழ்ப்பாண மாநகர சபையின் பொறுப்பில் உள்ள கோம்பயன் இந்து மயானத்தில் மூடப்படாத மனிதப் புதைகுழியில் உள்ள இறந்த உடல்களை நாய்கள் இழுத்துச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
நேற்றையதினம் (10.08.2023) ஆறுகால் மடப்பகுதியில் இறந்த குழந்தை ஒன்றின் தலைப் பகுதி வீட்டுக் காணி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது.
பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமை
குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் கோம்பயன் மயானத்தில் இறந்த உடல்களை அடக்கம் செய்யும் குழி ஒன்று மூடப்படாமல் திறந்த நிலையில் காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த குழி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இறந்த சிசுக்களை அடக்கம் செய்யும் பகுதியாக காணப்படுகின்ற நிலையில் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாது குறித்த குழியில் சடலங்கள் போடப்படுவதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்தது.
இந்நிலையில் குறித்த பகுதிக்கு நீதவான் நேரில் சென்று
பார்வையிட்டதுடன் மேலதிக நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 14 மணி நேரம் முன்

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

கணவன் உடலை டிரம்மில் வைத்து அடைத்த நிலையில்.., மணமக்களுக்கு பிளாஸ்டிக் டிரம் பரிசளித்த நண்பர்கள் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam
