காதலி பேசாதமையால் காதலன் எடுத்த விபரீத முடிவு
மொனராகலை பொலிஸ் பிரிவில் வசிக்கும் இளைஞர் ஒருவர் தனக்கு தானே துப்பாக்கி சூடு மேற்கொண்டு உயிரை மாய்த்துள்ளார்.
நேற்று மாலை 5.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் மொனராகலை மதுருகெட்டிய பகுதியை சேர்ந்த 21 வயதான ஹஷான் இந்திக பண்டார என என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் தனது வீட்டின் முன்னால் உயிரை மாய்த்துள்ளார். தன்னைத்தானே சுட்டுக் கொள்வதற்கு முன்பு தனது தாய் மற்றும் தந்தைக்கு எழுதப்பட்ட கடிதம் ஒரு மேசையில் காணப்பட்டது. அவரது பணப்பையில் அவரது காதலியின் புகைப்படமும் காணப்பட்டது.
காதலன் எடுத்த விபரீத முடிவு
பல நாட்களாக காதலியுடன் தொலைபேசியில் பேசாததால் அவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

போயா தினம் என்பதால் தாய் விகாரைக்கு சென்றிருந்தார், வீட்டில் யாரும் இல்லாத நிலையல் அருகிலுள்ள கடைக்குச் சென்று திரும்பிய தாத்தா, பேரன் உயிரிழந்து கிடப்பதனை கண்டு அதிர்ச்சி அடைத்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam