மகிந்த அரசுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த கஞ்சிபானி இம்ரான்! அநுர அரசு அம்பலப்படுத்தும் இரகசியம்
இலங்கையை விட்டுத் தப்பியோடிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கஞ்சிபானி இம்ரான் இன்னும் சில நாட்களில் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் என பாதுகாப்புப் பிரதி அமைச்சர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
தற்போது இத்தாலியில் உள்ள அவரை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், இதனை குறிப்பிட்டுள்ளார்.
இன்டர்போல் பிடியாணை
அதற்கமைய, இன்டர்போல் பிடியாணையின் கீழ் தேடப்பட்டுவரும் 58 குற்றவாளிகள் இதுவரை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
“கஞ்சிப்பானி இம்ரான் முந்தைய மகிந்தவின் ஆட்சியின் போது அரசியல் பிரமுகர்கள் ஆபத்தான குற்றவாளிகள் மற்றும் பல நபர்களுடன் தொடர்புகளைப் பேணியுள்ளார்.
இது அந்தக்காலகட்டத்தில் நாட்டின் சட்டத்தின் ஆட்சி குறித்து கேள்விகளை எழுப்புகின்றது.

இன்டர்போல் பிடியாணைகளின் கீழ் தேடப்பட்டுவந்த பல முக்கிய பாதாள உலக மற்றும் வர்த்தகக் குற்றவாளிகள் உட்பட 58 ஆபத்தான குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
பெரும் குற்றவியல் வலையமைப்பின் தலைவர்களை அரசாங்கம் தற்போது குறிவைத்து அவற்றை அகற்றி வருகின்றது.
இந்த முயற்சிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியுள்ளன.
மிகவும் ஆபத்தான குற்றவாளிகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு பாரிய முயற்சி தேவைப்பட்டது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் சட்டத்தின் ஆட்சியின் மேலாதிக்கத்தையும் அதிகாரத்தையும் வெளிப்படுத்துகின்றன” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு இழுத்துவரப்பட்ட ஷிரான் பாஸிக் தொடர்பில் திடுக்கிடும் தகவல் : பொலிஸார் விடுத்துள்ள தகவல்கள்
நல்லூர் கந்தசுவாமி கோவில் | கொடியேற்றம்