கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் பெரும் சர்ச்சையாகும் விசேட அதிரடிப்படையினரின் செயல் (VIDEO)

Sri Lanka Army Mullaitivu
By DiasA Sep 14, 2023 12:00 PM GMT
Report

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் அகழ்வாய்வுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அப்பகுதியில் அதிரடிப்படையினரின் செயல் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

மீட்கப்படும் அகழ்வுப் பொருட்களை விசேட அதிரடிப்படையினர் சிலர் கையுறையின்றி வெற்றுக் கைகளால் எடுத்து ஆய்வுகளை மேற்கொள்ளும் நடவடிக்கையே இவ்வாறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வாய்வு

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த 6ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பொருட்களுக்கு பலத்த பாதுகாப்பு(Photos)

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பொருட்களுக்கு பலத்த பாதுகாப்பு(Photos)

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் பெரும் சர்ச்சையாகும் விசேட அதிரடிப்படையினரின் செயல் (VIDEO) | Kokkuthoduwai Human Burial Ground

இந்த நிலையில் குறித்த பகுதியிலிருந்து 5 மனித எச்சங்கள அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், விடுதலைப் புலிகளின் சைனட் குப்பி ஒன்றும், இரண்டு இலக்கத் தகடுகளும் தடயப் பொருட்களாக எடுக்கப்பட்டுள்ளன.

ஏழு நாட்கள் அகழ்வாய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை 9 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

மிக நெருக்கமாக உள்ள எலும்புகள்

அத்துடன் முல்லைத்தீவு சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா அகழ்வுப் பணிகள் தொடர்பில் கூறுகையில், இந்தப் புதைகுழியிலுள்ள எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மிக நெருக்கமாக, ஒன்றுடனொன்று பின்னிப் பிணைந்து காணப்படுவதால், அகழ்வாய்வு செய்வதற்கு அதிக நேரத்தைச் செலவிட வேண்டியுள்ளது.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் பெரும் சர்ச்சையாகும் விசேட அதிரடிப்படையினரின் செயல் (VIDEO) | Kokkuthoduwai Human Burial Ground

அகழ்வாய்வுகள் மேற்கொள்ளும்போது, சில நாட்களில் ஓரிரு எலும்புக்கூட்டுத் தொகுதிகளையே அகழ்ந்தெடுக்க முடிகின்றது. குறித்த மனிதப் புதைகுழியிலுள்ள எலும்புக்கூட்டுத் தொகுதிகளையும், தடயப் பொருட்களையும் எடுத்தாலே, இது தொடர்பில் சரியான ஆய்வுகளை மேற்கொள்ள முடியும். எனவே, அகழ்வாய்வுப் பணிகளின் காலத்தை வரையறுக்க முடியாதுள்ளது.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் விடுதலைப்புலிகளின் சைனட் குப்பி மீட்பு (Photos)

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் விடுதலைப்புலிகளின் சைனட் குப்பி மீட்பு (Photos)

ஏற்கனவே அகழப்பட்டுள்ள குழியிலிருந்து மனித எச்சங்களையும், தடயப் பொருட்களையும் முழுமையாக அகழ்வாய்வு செய்து எடுப்பதற்கு ஒரு சில வாரங்கள் நீடிக்கலாம் என நினைக்கின்றேன். அதனைவிட இன்னும் மேலதிகமாக குழியைத் தோண்டி அகழ்வாய்வுகள் மேற்கொள்வதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் எனக் கூறமுடியாது.

இந்தப் புதைகுழி தொடர்பிலான அறிக்கைகள், அகழ்வாய்வு செய்யும் குழுவினரால் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்படும். அகழ்வாய்வில் எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளும், தடயப் பொருட்களும் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள பிரேத சாலையில் விசேட அறையில் வைக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டிருந்தார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் பெரும் சர்ச்சையாகும் விசேட அதிரடிப்படையினரின் செயல் (VIDEO) | Kokkuthoduwai Human Burial Ground

கையுறையின்றி கையாளப்படும் தடயப் பொருட்கள்

இந்த நிலையிலேயே இவ்வாறு கையுறையின்றி தடயப் பொருட்களை கையாளும் போது அவற்றிலிருக்கும் தடயங்கள் சிதைவடைவதற்காக சாத்தியம் காணப்படுவதாக சமூக அவதானிகள் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப்பணியில் ஊடகவியலாளர்களுக்கு விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடு (Photos)

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப்பணியில் ஊடகவியலாளர்களுக்கு விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடு (Photos)

அத்துடன் குறித்த பகுதியில் பாதுகாப்பின் நிமித்தமே விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போதும், கையுறையின்றி தடயப்பொருட்களை கையாளும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், இதற்கான அதிகாரம் எவ்வாறு வழங்கப்பட்டது மற்றும் இது தொடர்பான போதிய தெளிவில்லாதவர்களை இந்த செயற்பாட்டில் ஈடுபடுத்தியது யார் என்றவாறான கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. 

ஐரோப்பாவில் கையுறையின்றி தொல்லியல் பொருட்களை கையாள முடியும் காரணம் அவை நூற்றாண்டுகள் கடந்தவை, தற்போது அகழப்படுவது நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் புதைந்துள்ள தொல்லியல் பொருட்கள் இல்லை என அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் பெரும் சர்ச்சையாகும் விசேட அதிரடிப்படையினரின் செயல் (VIDEO) | Kokkuthoduwai Human Burial Ground

அத்துடன் கைகளில் உள்ள வியர்வை, கைகளில் ஒட்டியிருக்கும் வேறு பகுதியை சேர்ந்த மண் மற்றும் இரசாயனங்கள் உள்ளிட்ட பொருட்கள் என்பன கையுறையின்றி தடயப்பொருட்களை தொடுவதன் காரணமாக அவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இவை குறிப்பாக இரசாயன பகுப்பாய்விற்கு உட்படுத்தப்படும் போது முடிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் சாத்தியம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் அடுக்கடுக்காக உடலங்கள்: வெளிவரும் அதிர்ச்சி தகவல்(Video)

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் அடுக்கடுக்காக உடலங்கள்: வெளிவரும் அதிர்ச்சி தகவல்(Video)

10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

27 Oct, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US