முதல் வெற்றியை பெற போவது யார்..! கொல்கத்தா-ராஜஸ்தான் மோதல்
18ஆவது ஐ.பி.எல் சீசன் ஆரம்பமாகியுள்ள நிலையில் இன்றையதினம்(26) 6ஆவது போட்டி நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில், முன்னாள் செம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராஜஸ்தான் ரோயல்ஸ்(RR) அணியுடன் மோதுகின்றது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதலாவது போட்டியில் பெங்களூருவுக்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி
இதேபோல் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சன்ரைசஸ் ஐதராபாத் அணியுடன் தோற்றது.

விரலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக மீளாததால் அணித்தலைவர் சஞ்சு சாம்சன் கடந்த ஆட்டத்தில் 'இம்பேக்ட்' வீரராகவே பயன்படுத்தப்பட்டார்.
இன்றைய ஆட்டத்திலும் அதே நிலை தொடருவதால் ரியான் பராக் அணித்தலைவராக தொடரவுள்ளார்.
முதலாவது வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 29 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன.

இதில் இரு அணியும் தலா 14 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன.மற்றொரு போட்டியில் முடிவில்லை.
இந்நிலையில் இன்றைய போட்டி நடைபெறவுள்ளது, இரு அணிகளில் வெற்றிப்பெறும் அணி தனது முதலாவது வெற்றியை இந்த தொடரில் பதிவு செய்யும்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஒரு REEL-க்கு ரூ. 76 லட்சம் சம்பளம்.. ஓரியின் வருமானத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam