சர்ச்சையை கிளப்பி வரும் கிவுல் ஓயா திட்டம்.. பறிபோகுமா 13 000 ஏக்கர் தமிழர் நிலம்..!
வவுனியா மாவட்டத்தில் மீண்டும் தீவிர விவாதத்தை ஏற்படுத்தியுள்ள கிவுல் ஓயா நீர் விநியோகத் திட்டம், உண்மையில் யாருக்கான அபிவிருத்தி என்ற கேள்வியை இன்று மீண்டும் எழுப்பியுள்ளது.
இன்றைய நாளில் அரசியல் மேடைகளில் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக இவ்விடயம் பெரும் சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது.
கிவுல் ஓயா நீர் விநியோகத் திட்டம் முதன்முறையாக 2011ஆம் ஆண்டு, அப்போது ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் System L (மகாவலி – எல் வலயம்) திட்டத்தின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்டது.
உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னணியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரசின் கட்டுப்பாட்டையும் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் வலுப்படுத்தும் நோக்கில் பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அந்த வரிசையில் உருவான திட்டங்களில் ஒன்றாகவே கிவுல் ஓயா திட்டம் கருதப்படுகிறது. உண்மையில், கிவுல் ஓயா திட்டம் அபிவிருத்தியா? ஆக்கிரமிப்பா..?
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam