திரிபோஷா சத்துமாவை வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்.. கவலை வெளியிட்டுள்ள அதிகாரிகள்
கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் இலவச திரிபோஷா, பல மாதங்களாக சில பிராந்திய சுகாதார அதிகாரி அலுவலகங்களுக்கு கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
தேவையை பூர்த்தி செய்யும் அளவு விநியோகத்தை வழங்க முடியாததால் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக குடும்ப சுகாதார சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திரிபோஷா உற்பத்திக்குத் தேவையான சோளம் போதுமான அளவு இல்லாததே இதற்குக் காரணம் என்று இலங்கை திரிபோஷா நிறுவனத்தின் தலைவர் அமல் அத்தநாயக்க கூறியுள்ளார்.
சோளம் இறக்குமதி
கடந்த 2024ஆம் ஆண்டில் 4800 மெட்ரிக் தொன் சோளத்தை இறக்குமதி செய்ய கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அனுமதி வழங்கப்படவில்லை என்றும், அண்மையில் அந்த அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அமைச்சரவை ஒப்புதல் நிலுவையில் உள்ள நிலையில், 2000 மெட்ரிக் தொன் சோளம் 3 வாரங்களுக்கும் மேலாக சுங்கச்சாவடிகளில் தேங்கி நிற்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை திரிபோஷா நிறுவனத்தின் தலைவர், தனது நிறுவனம் கோரிய அளவில் 300 மெட்ரிக் தொன் மட்டுமே பெற்றதாகவும், இது தேவையை பூர்த்தி செய்யுமளவு திரிபோஷாவை உற்பத்தி செய்ய போதுமானதாக இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், தேவையான அளவு திரிபோஷா மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பிராந்திய சுகாதார அதிகாரிகள் அலுவலகங்களுக்கும், இரத்தினபுரி, கேகாலை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் உள்ள பிராந்திய சுகாதார அதிகாரிகள் அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேநேரம், உற்பத்தி செய்யப்படும் திரிபோஷாவை விநியோகிப்பதிலும் சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும், போக்குவரத்துக்கு போதுமான லொறிகள் இல்லாமையே இதற்குக் காரணம் என்றும் இலங்கை திரிபோஷா நிறுவனத்தின் தலைவர் அமல் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri