நாடு முழுவதும் மோசமடையும் லிட்ரோ மற்றும் லாஃப் எரிவாயு பற்றாக்குறை! வெளியான காரணம்
நாடு முழுவதும் நிலவும் லிட்ரோ மற்றும் லாஃப் எரிவாயு பற்றாக்குறை மேலும் மோசமடைந்து வருவதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், பதிவு செய்யப்பட்ட எரிவாயு இருப்புக்கள் பெறப்பட்டு வருவதாகவும் லிட்ரோ மற்றும் லாஃப் எரிவாயு நிறுவன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
வெளியான காரணம்
இதற்கிடையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் எரிவாயு பற்றாக்குறை கடுமையாக இருப்பதாக மேலும் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, லாஃப் எரிவாயுக்கு இன்னும் கடுமையான பற்றாக்குறை இருப்பதாகவும் நுகர்வோர் தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும், மக்கள் அதிகளவில் எரிவாயுவை வாங்குவதனால் சில பகுதிகளில் கடுமையான எரிவாயு பற்றாக்குறை நிலவி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
தற்போது பல உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் வீடுகளில் லிட்ரோ மற்றும் லாஃப் ஆகிய இரண்டு நிறுவனங்களின் எரிவாயு சிலிண்டர்கள் இருப்பதாகவும், நுகர்வோர் இரண்டையும் வாங்க நடவடிக்கை எடுப்பதால் பற்றாக்குறை மேலும் மோசமடைந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல் இயக்குநரின் அடுத்த புதிய சீரியல்.. தலைப்பு என்ன தெரியுமா? Cineulagam
பச்ச குழந்தை விஜய்க்கு என்ன தெரியும்? 40 வயது த்ரிஷா தான் தவறு... தாறுமாறாக கலாய்த்த மருத்துவர்! Manithan
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam