நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் தொடர்பில் வெளியான பல உண்மைகள்....
இடைநிறுத்தப்பட்ட நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குமார குலரத்ன, முறையான வைத்திய பரிசோதனை அறிக்கையை உத்தியோகப்பூர்வ ஆவண கோப்பில் சமர்ப்பிக்கவில்லை என தெரியவந்துள்ளது.
அவரது நியமனம் தொடர்பில் விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணையின் போது இது தொடர்பான உண்மைகள் வெளிவந்துள்ளன. நிரந்தர ஓய்வூதியம் பெறும் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்யும்போது செல்லுபடியாகும் மருத்துவ பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
இருப்பினும், நாடாளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகமாக சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட சமிந்த குமார குலரத்ன, மேற்படி மருத்துவ பரிசோதனைக்கு ஆஜராக மறுத்துவிட்டார்.
அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பணியாற் குழாமின் உறுப்பினராகவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மேலதிக செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் இந்த சட்டவிரோத நியமனம் ரணில் விக்ரமசிங்க ஆட்சியின் போது வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
அதிகாரத்தைக் கைப்பற்றியதைவிட எதிர்காலத்தில் பாரிய நெருக்கடி எமக்குள்ளது;அமைச்சர் லால் காந்த பகிரங்கம்...
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri