தாய்க்கு அழைப்பெடுத்த கிளிநொச்சியில் காணாமல்போன மாணவி: வெளியாகியுள்ள புதிய தகவல்கள்

Sri Lanka Police Kilinochchi G.C.E.(A/L) Examination
By Mayuri Sep 14, 2023 08:40 PM GMT
Report

கிளிநொச்சி - விநாயகபுரம் பகுதியில் க.பொ.த உயர்தர மாணவி காணாமல்போன சம்பவம் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி குறித்த மாணவி தனது தாய்க்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி கதைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

விநாயகபுரம் பகுதியில் காணாமல்போயுள்ள பாடசாலை மாணவி ஒருவரை கண்டறிய அண்மையில் பொதுமக்களின் உதவி கோரப்பட்டிருந்தது.

கிளிநொச்சி உயர்தர பாடசாலை மாணவி மாயம்! பொதுமக்களின் உதவிகோரியுள்ள பொலிஸார்

கிளிநொச்சி உயர்தர பாடசாலை மாணவி மாயம்! பொதுமக்களின் உதவிகோரியுள்ள பொலிஸார்

தாய்க்கு அழைப்பெடுத்த கிளிநொச்சியில் காணாமல்போன மாணவி: வெளியாகியுள்ள புதிய தகவல்கள் | Kilinochchi Missing Girl New Information

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

18 வயதுடைய புவனேஷ்வரன் ஆர்த்தி என்ற மாணவி கடந்த ஒரு வாரமாக காணாமல்போயுள்ளார்.

குறித்த மாணவி மேலதிக வகுப்புக்குச் சென்று வீடு திரும்பாமையினால் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரியவந்திருந்தது.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் பெரும் சர்ச்சையாகும் விசேட அதிரடிப்படையினரின் செயல் (VIDEO)

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் பெரும் சர்ச்சையாகும் விசேட அதிரடிப்படையினரின் செயல் (VIDEO)

இந்த நிலையில் குறித்த மாணவியின் தாய் கூறுகையில், சம்பவ தினத்தன்று காலை பத்து மணிக்கு மேலதிக வகுப்பிற்காக மாணவியின் தந்தையே அந்த மாணவியை அழைத்து சென்று விட்டுள்ளார்.

மாணவியின் தொலைபேசி அழைப்பு

எனினும் காலை பத்து மணிக்கு நடக்க வேண்டிய முதல் வகுப்பு நடத்தப்படவில்லை எனவும், குறித்த மாணவி வகுப்பிலுள்ள மாணவர்களிடம் பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரையில் கதைத்துக் கொண்டிருந்த நிலையில் வகுப்பிலிருந்து வெளியில் சென்றுள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தாய்க்கு அழைப்பெடுத்த கிளிநொச்சியில் காணாமல்போன மாணவி: வெளியாகியுள்ள புதிய தகவல்கள் | Kilinochchi Missing Girl New Information

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குற்றவாளிகள் எவராக இருப்பினும் தப்ப முடியாது: ரணில் சூளுரை

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குற்றவாளிகள் எவராக இருப்பினும் தப்ப முடியாது: ரணில் சூளுரை

இதனை தொடர்ந்து 12 மணிக்கு மகளை அழைத்துச் செல்ல வந்த தந்தை மகளை காணாது தேடியுள்ளார். இவ்வாறான நிலையில் 12.15 மணியளவில் காணாமல் போன மாணவியிடமிருந்து தாய்க்கு அழைப்பு வந்துள்ளது.

அதில் அவர், தான் பாதுகாப்பாக இருப்பதாகவும், தான் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டதாகவும், தாயை அழ வேண்டாம் எனவும், தங்கையை நன்றாக பார்த்துக் கொள்ளுமாறும் கூறியுள்ளார்.

மாணவி அழைப்பை ஏற்படுத்திய தொலைபேசி இலக்கத்திற்கான சிம் அந்த மாணவியின் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது எனவும் அந்த தாய் குறிப்பிட்டுள்ளார். 

எரிபாெருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நிலை

எரிபாெருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நிலை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US