கிளிநொச்சியில் வயோதிபர் சடலமாக மீட்பு(photo)
கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இத்தாவில் பகுதியில் தனிமையில் இருந்த வயோதிபர் ஒருவர், வீட்டின் பின் பக்கத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஐந்து பிள்ளைகளின் தந்தையான 65 வயதுடைய தம்பையா கந்தசாமி என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர், பளை - இத்தாவில் பகுதியில், தனது மகளுடன் வசித்து வந்துள்ளார்.
இந்தநிலையில், கடந்த வெள்ளிக்கிழமை, தனது தந்தையான தம்பையா கந்தசாமி என்பவரை, வீட்டில் விட்டு விட்டு, வவுனியாவில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்ற மகள், இன்று வீடு திரும்பிய நிலையில் சடலத்தை அவதானித்துள்ளார்.

பொலிஸார் விசாரணை
அதன் பின்னர், பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்துக்குச் சென்ற கிளிநொச்சி மாவட்ட பதில் நீதிவான் சடலத்தைப் பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனைக்காகச் சடலத்தைக் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பளைப் பொலிஸார் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| கொழும்பில் வீதியில் கிடந்த பெருந்தொகை பணம் - பொலிஸ் அதிகாரியின் நேர்மையான செயல் |
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
98வது ஆஸ்கர்.. சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் தேர்வாகியுள்ள ஜான்வி கபூரின் 'ஹோம்பவுண்ட்' படம்.. Cineulagam
Bigg Boss: பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற கதறியழும் சாண்ட்ரா... பிக்பாஸ் எடுக்கும் முடிவு என்ன? Manithan