கொழும்பில் வீதியில் கிடந்த பெருந்தொகை பணம் - பொலிஸ் அதிகாரியின் நேர்மையான செயல்
வீதியில் கிடந்த நாணயப் பணப்பையொன்றும் இலட்சக்கணக்கான ரூபா பணமும் அதன் உரிமையாளரிடம் மீள ஒப்படைக்கப்பட்ட சம்பவம் ஒன்றும் கொழும்பு - வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
வெல்லம்பிட்டி பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் இஷார மதுசங்க என்பவரே வீதியில் விழுந்திருந்த பணப்பையை கண்டெடுத்துள்ளார்.
வெல்லம்பிட்டிய பாண்டியாவத்தை பகுதியில் உள்ள வீதியொன்றில் நாணயப் பணப்பை ஒன்று கிடந்துள்ளது. பணப்பையை பரிசோதித்த போது, அதில் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 960 ரூபாய் பணமும், 3 லட்சம் ரூபாய் பெறுமதியான காசோலையும் இருந்துள்ளது.
பின்னர், இது தொடர்பில் வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு அதிகாரி அறிவித்துள்ளார்.
அதன்படி, பணப்பையின் உரிமையாளர் குறித்த தகவல் தெரியவர, அவரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து பணப்பையை ஒப்படைத்துள்ளனர்.

Puzzle iq test: படத்தில் உள்ள காதல் ஜோடிகளில் யார் ஏலியன்? 5 விநாடிகளில் பதிலை கண்டுபிடிங்க Manithan

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam
