ஆறு மாதங்களின் பின்னர் பொது நிகழ்வில் கலந்துகொண்ட இளவரசி கேட்
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் 6 மாதங்களுக்கு பின்னர் பொது நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மன்னர் சார்லஸின் பிறந்தநாளை முன்னிட்டு லண்டனில் இடம்பெற்ற இராணுவ அணிவகுப்பு நிகழ்வில் அவர் கலந்துக்கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகைக்குப் பிறகு கேட் மிடில்டன் கலந்துகொண்ட பொது நிகழ்வாக இது கருதப்படுகிறது.
புற்றுநோய் பாதிப்பு
நீண்டநாட்களாக பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ளாத கேட் தொடர்பில் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

இதற்கு பதிலாக அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என அதிர்ச்சி தகவல் வெளியானது. புற்றுநோய் குணமாக கேட் மிடில்டன் ஹீமோதெரபி சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சுமார் ஆறு மாதத்திற்கு பிறகு பொது வெளியில் கேட் மிடில்டன் தோன்றியமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam