யாழில் 18 வயது இரட்டை சகோதரிகளின் சோகமான முடிவு..!
யாழ்ப்பாணத்தில் 18 வயதுடைய இரட்டைச் சகோதரிகள் இருவர் தவறான முடிவெடுத்து தமக்கு தாமே தீ மூட்டி உயிர்மாய்த்து கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(01.08.2026) அவருடைய வீட்டில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரட்டை சகோதரிகளின் சோகமான முடிவு
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய இரட்டை சகோதரிகள் தமக்கு தாமே தீ வைத்து உயிர்மாய்த்து கொண்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவர் காப்பாற்றப்பட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர்கள் இருவரும் இன்று(01) அதிகாலை உயிரிழந்துள்ளனர்.
“வாழ்வதற்கு விருப்பமில்லாத காரணத்தால்..” இவ்வாறு செய்ததாக அவர்கள் உயிரிழப்பதற்கு முன்னர் வாக்குமூலம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri