மஹர சிறையில் வெடித்த கலவரம் - உயிரிழந்த கைதி தொடர்பில் வெளியான தகவல்
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்த கைதி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று (01) பிற்பகல் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மஹர சிறைச்சாலையினுள் பதற்றநிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று மாலை சுமார் 4 மணியளவில் ஏற்பட்ட கலவரத்தின் காரணமாக கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பல கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கைதி தொடர்பில் வெளியான தகவல்
இந்நிலையில், வத்தளை- ஹெந்தல பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய கைதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கியொன்றினை திருடியமை மற்றும் 20 கிராம் ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
இதன்போது கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்துள்ளார்.
பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
இதனையடுத்து மஹர சிறைச்சாலைக்கு வெளியே பாதுகாப்பு வழங்குவதற்காக பொலிஸ், சிறப்பு அதிரடிப்படை (FTF) மற்றும் இராணுவ அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் தற்போது முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்து கைதிகளும் தற்போது அவரவர் சிறைக்கூடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும், சிறையில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், சிறைக்கு வெளியே பாதுகாப்பு வழங்குவதற்காக பொலிஸ், சிறப்பு அதிரடிப்படை (FTF) மற்றும் இராணுவ அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam