யூரோ கால்பந்தாட்ட தொடரின் கொண்டாட்ட நிகழ்வில் துப்பாக்கிச்சூடு
யூரோ 2024 ஆம் ஆண்டுக்கான கால்பந்தாட்ட தொடரின் கொண்டாட்ட நிகழ்வில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஜேர்மனியின் சாக்சோனி-அன்ஹால்ட் மாகாணத்தில் Euro 2024 கால்பந்தாட்டப் போட்டிகள் ஆரம்பமானதை கொண்டாடுவதற்காக, ஒழுங்கு செய்திருந்த நிகழ்விலேயே இவ்வாறு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது நிகழ்வில் கலந்துகொண்ட நபரொருவர் திடீரென அங்கிருந்த ரசிகர்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடாத்தியுள்ளார்.
துப்பாக்கி பிரயோகம்
இந்த தாக்குதலில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது தாக்குதலை நடத்தியவரை கட்டுப்படுத்த பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், மருத்துவமனைக்குக் அவரை கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தம்முடன் விவாதத்தை தவிர்த்து விட்ட சஜித், மாணவர்கள் முன்னால் அதனை பற்றி பேசக்கூடாது : தேசிய மக்கள் சக்தி
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri