லெபனான் பதற்றத்தின் தீவிரம்: பிரான்ஸின் திட்டத்தை நிராகரித்த இஸ்ரேல்
லெபனானுடன் தொடரும் பதற்றத்தைக் குறைக்க பிரான்ஸ் முன்வைத்த திட்டத்தை நிராகரிப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
லெபனான் - இஸ்ரேல் எல்லையில் நீண்ட நாட்களாக பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்னுவேல் மேக்ரான்(Emmanuel Jean-Michel Frédéric Macron) பதற்றத்தைக் குறைக்கும் வகையில் திட்டம் ஒன்றை அண்மையில் முன்வைத்திருந்தார்.
லெபனானுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருக்கும் பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் இணைந்து, பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்கும் ஒரு திட்டத்தை முன்வைக்கும் முகமாக திட்டமானது அமைந்திருந்ததாக பிரான்ஸ் தரப்பு தெரிவித்தது.
நியாயமான போர்
எனினும், நாங்கள் எங்கள் நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்காக ஒரு நியாயமான போரை நடத்துகிறோம்.

ஆனால், பிரான்ஸ் இஸ்ரேலுக்கு எதிரான கொள்கைகளை கொண்டுள்ளது என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் யோசவ் கல்லன்ட் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் இவ்வாறு செய்வதன் மூலம், இஸ்ரேலிய குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்களுக்கு எதிராக ஹமாஸ் நடத்திய அட்டூழியங்களை அலட்சியம் செய்கிறது.
பிரான்ஸ் முன்வைத்த முத்தரப்பு திட்டத்தில் இஸ்ரேல் பங்கேற்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மரண வீட்டில் அரசியல்.. 1 நாள் முன்
விஜயா செய்த கேவலமான வேலை, ஆத்திரத்தில் அடிக்க சென்ற அண்ணாமலை.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
தொடர் தோல்வி, ஆனாலும் முயற்சியை கைவிடாத ஷங்கர்.. ரூ. 1000 கோடியில் உருவாகும் பிரம்மாண்ட படம் Cineulagam