இஸ்ரேல் முழுவதும் வெடிப்பு சத்தங்கள்! பயந்தோடும் மக்கள்: எல்லையை குறிவைத்து ஈரான் அதிரடி தாக்குதல்
ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி இன்று (05) அதிகாலை பல ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல்கள் காரணமாக எவ்வித உயிர்ச்சேதங்களும் இதுவரை பதிவாகவில்லை என அந்நாட்டு செய்திகள் வெளியாகியுள்ளன.
நாடு முழுவதும் பயங்கர குண்டுவெடிப்பு
நாடு முழுவதும் பயங்கர குண்டுவெடிப்பு சத்தமும், அவசரகால படையினரின் சைரன் சத்தமும் சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு தொடர்ச்சியாக விடுக்கப்பட்டுள்ளதுடன், ஜெருசலேம் நகரில் வெடிப்புச்சத்தங்களும் தொடர்ந்துள்ளது.

இந்நிலையில் பாதுக்காப்பை மீறி தாக்குதலை ஈரான் தீவிரப்படுத்தி வரும்நிலையில், நாட்டு மக்களுக்கு இஸ்ரேல் இராணுவம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானில் இருந்து இஸ்ரேல் நாட்டின் எல்லையை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டதை இஸ்ரேல் இராணுவம் (IDF) அடையாளம் கண்டுள்ளது.
மொபைல் எச்சரிக்கை
அச்சுறுத்தலைத் தடுக்க பாதுகாப்பு அமைப்புகள் செயல்பட்டு வருவதுடன், மொபைல் எச்சரிக்கையை பெற்றவுடன் பாதுகாக்கப்பட்ட இடங்களுக்குள் நுழைந்து புதிய அறிவிப்பு வரும் வரை அவற்றில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

அறிவுறுத்தல்களின்படி தொடர்ந்து செயல்படுமாறும்,வெளிப்படையான உத்தரவைப் பெற்ற பின்னரே பாதுகாக்கப்பட்ட இடத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்பு, ஈரானின் நூற்றுக்கணக்கான நீண்டதூர ஏவுகணைகள், ஏவுதளங்கள் மற்றும் டிரோன்களை அழித்ததாக அமெரிக்க கடற்படை அதிகாரி பிரட் கூப்பர் கூறியுள்ளார்.
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam