கராப்பிட்டிய மருத்துவமனை மோதல் விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
காலி, கராப்பிட்டிய போதனா மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் இடம்பெற்ற மோதலுடன் தொடர்புடைய மருத்துவர் உள்ளிட்டவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கராப்பிட்டிய போதனா மருத்துவமனையின் சிரேஷ்ட புற்று நோய் வைத்தியர் கிரிஷாந்த பெரேராவுக்கு, சிற்றூழியரான பெண் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கடந்த 18ஆம் திகதி விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
நீதிமன்றத் தீர்ப்பு
அதேவேளை, வைத்தியரும் தான் தாக்கப்பட்டதாக முறைப்பாடு செய்ததையடுத்து, கராப்பிட்டிய வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.
இந்நிலையில், நேற்றைய தினம் (23.01.2024) காலி நீதவான் நீதிமன்றத்தில் பிணை மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், மருத்துவர் கிரிஷாந்த பெரேரா மற்றும் சிற்றூழியர்கள் மூவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri
