இணையவழி பாதுகாப்பு யோசனைக்கு நாடாளுமன்றில் அங்கீகாரம்
உயர் நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட ஊடகங்கள் மற்றும் புதிய குடிமக்கள் மீதான இணையவழி பாதுகாப்பு யோசனை, திருத்தங்களுக்கு உட்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தகவல் தொடர்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் லலித் வரன்குமார தலைமையில் துறைசார் கண்காணிப்புக் குழு
இன்று (22.01.2024) நாடாளுமன்றத்தில் கூடிய போதே இந்த சட்டமூலத்திற்கு அங்கீகாரம்
வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த சட்டமூலம் நாளை இரண்டாம் வாசிப்பு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்தநிலையில், பொது பாதுகாப்பு அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், சட்ட வரைவுத் திணைக்களம், இலங்கை பொலிஸ் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் தேசிய செயலகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இன்றைய சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.
கால அவகாசம்
மேலும், குழுவின் உறுப்பினர்களான கயந்த கருணாதிலக்க, ஜயந்த கட்டகொட, சஞ்சீவ எதிரிமான்ன, ஜகத் சமரவிக்ம, எரான் விக்கிரமரத்ன, சந்திம வீரக்கொடி மற்றும் எஸ்.எம்.எம்.முஸாரப் ஆகியோர் இன்றைய சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.
இதன்படி இந்த சந்திப்பில், வரைபு சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ள மேலும் கால அவகாசம் தேவை எனவும், இது தொடர்பில் கொள்கை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க, எரான் விக்கிரமரத்ன மற்றும் சந்திம வீரக்கொடி ஆகியோர் குழுவிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன்படி, இந்த உறுப்பினர்கள் முன்வைக்கும் விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும் என குழுவின் தலைவர் உறுதியளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |