தென்னிலங்கை அரசியல்வாதி சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல்
தென்னிலங்கையில் இன்று காலை ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்றினால் சுட்டுக்கொலைப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
தங்காலை, குடாவெல்ல பிரதேசத்தில் மூவர் படுகொலை செய்யப்பட்டமைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 05 பேர் உயிரிழந்துள்ளனர்.
துப்பாக்கி சூடு
இந்த துப்பாக்கி சூட்டில் அபே ஜனபலய கட்சியின் தலைவர் சமன் பெரேராவும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வழக்கு ஒன்றில் பங்கேற்க சென்றபோதே அவர் துப்பாக்கிச்சூட்டிற்கு இழக்காகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
பச்சை நிற வண்டியில் வந்த சிலர் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இறந்தவர் டிபென்டர் காரில் வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் திகதி தங்காலையில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு அடைக்கலம் வழங்கிய சம்பவம் தொடர்பில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களினால் உயிரிழந்த சமன் பெரேரா, அந்த ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.