களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற பதில் பதிவாளர் கைது
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு சான்றுப்பொருள் வைக்கும் அறையில் இருந்து 1 கோடி முப்பது இலட்சம் பெறுமதியான 350கிராம் தங்க நகைகள் காணமல் போன சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற பதில் பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை களுவாஞ்சிகுடி பொலிஸாரால் நேற்று (20.11.2025) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரிடம் விசாரணை
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற பதில் பதிவாளர் சந்தேகத்தின் பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதோடு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |