ஹமாஸிடம் இருந்து நேரடியாக உயிர் தப்பிய இஸ்ரேலியப் பெண் கூறிய முக்கிய தகவல்..!
2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 07ஆம் திகதி இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் காசாவிற்கு மிக அருகில் உள்ள இஸ்ரேலிய கிப்புட்ஸ் ஒன்றில் 62 பேர் கொல்லப்பட்டதோடு 19 பேர் பணயக்கைதிகளாக காசாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
கிப்புட்ஸ் என்பது இஸ்ரேலில் உள்ள யூத குடியிருப்புக்களை அழைக்கும் மற்றுமொரு பெயராகும்.
குறித்த கிப்புட்ஸில் வசிக்கும் மக்கள் தங்களின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவையும் இஸ்ரேலியப் படையினரையும் வெறுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்கள் மீது குறித்த மக்கள் நம்பிக்கை இழந்தமையே இதற்கான காரணமாகும்.
இதேவேளை, குறித்த கிப்புட்ஸ் அருகில் நடந்த ஒரு இசைக் கச்சேரியில் 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 07ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் மட்டும் 378 பேர் கொல்லப்பட்டனர்.
இதன்போது, உயிர் தப்பிய 23 வயதான நோவா க்ளாஸ் என்ற பெண், தாக்குதலின் போது புதர் ஒன்றுக்குள் மறைந்திருந்த நிலையில், தான் கண்ட கொடூர காட்சிகளை விவரித்தார்.
குறித்த கொடூரத்தின் சாட்சிகளை பதிவு செய்ய வேண்டும் என்பதே தான் உயிர் தப்பியமைக்கான காரணம் என அவர் கூறுகின்றார்.
அவர் கண்ட கொடூர காட்சிகள் குறித்து விரிவாக ஆராய்கின்றது எமது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |