களுபோவில பகுதியில் துப்பாக்கிச் சூடு
கொஹுவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுபோவில விகாரை வீதியில் இன்று காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
சந்தேகநபர்கள், வீட்டின் வாயிலிலும், வீட்டையும் நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதன்போது, யாருக்கும் உயிர் சேதமோ அல்லது காயமோ ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், நிதி தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும், கல்கிசை பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் கொஹுவல பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
