தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் மோதல்! இரு இலங்கைப் பெண்களுக்கு நேர்ந்துள்ள நிலை
இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கிடையில் மூண்டுள்ள போர் பதற்றம் காரணமாக இரண்டு இலங்கைப் பெண்கள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த நிலையில், இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்ட அதிர்வினை அடுத்து, இஸ்ரேலில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றிய இலங்கை பெண்ணொருவர் குறித்த வீட்டாருடன் வெளியேறியுள்ளார்.
ஆபத்தில் இருக்கும் இலங்கையர்கள்
இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார இது தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இந்த தாக்குதல் காரணமாக மற்றுமொரு இலங்கைப் பெண்ணுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும், ஆனால் அவரது நிலை மோசமாக இல்லை என்றும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த போர் நிலையில் பாதிக்கப்பட்டுள்ள, பாதிப்பை எதிர்நோக்கியிருக்கும் அல்லது ஆபத்தில் இருக்கும் எந்தவொரு இலங்கையரும் உடனடியாக தூதரகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு வெளியுறவு அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்கத்கது.




