அவசரமாக மத்திய கிழக்கிற்கு பறக்கும் பிரித்தானிய ஜெட் விமானங்கள்! வலுக்கும் போர் பதற்றம்
மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பிரித்தானியாவின் சில ஜெட் விமானங்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளன.
பிராந்தியத்தில் அவசர உதவிக்காக இராணுவ விமானங்கள் அனுப்பப்படுவதாக பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடலில் நேற்று(13) ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தீவிர விவாதங்கள்
இரண்டு நட்பு நாடுகளுக்கு இடையே இஸ்ரேலின் பாதுகாப்பு குறித்து குறித்த கலந்துரையாடல் அமைந்ததாக அவர் கூறியுள்ளார்.
ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து பிரித்தானியா நீண்ட கவலைகளை கொண்டுள்ளது எனவும் இஸ்ரேலின் தற்காப்புக்கான உரிமையை அங்கீகரிக்கிறது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், போர் பதற்றம் தீவிரமடைவதைத் தடுக்க வேண்டும் என்பதில் தான் தெளிவாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கனடாவில் நாளை தொடங்கும் G7 உச்சிமாநாட்டிற்கு செல்லவுள்ள நிலையில், நட்பு நாடுகளுடன் தீவிர விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும் ஸ்டார்மர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri

கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் ரஜினியின் கூலி.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
