இதுவே தாக்குதலின் ஆரம்பம்.. நெதன்யாகு வெளியிட்ட திடுக்கிடும் தகவல்!
இனிவரும் காலங்களில் ஈரான் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் மிக மோசமானதாக இருக்கும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
காணொளி ஒன்றில் உரையாற்றிய அவர், "அயதுல்லாக்களின் ஆட்சியின் ஒவ்வொரு தளத்தையும் ஒவ்வொரு இலக்கையும் நாங்கள் தாக்குவோம்.
இனி நாங்கள் மேற்கொள்ள போகும் தாக்குதல்களை ஒப்பிடும் போது இதுவரை அவர்கள் பார்த்த அடிகள் ஒன்றுமேயில்லை” என கடுமையாக எச்சரித்துள்ளார்.
திடீர் தாக்குதல்
நேற்று முன்தினம், இஸ்ரேல் ஈரான் மீது திடீர் தாக்குதலை நடத்தியது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணை மற்றும் அணுசக்தி நிலையங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டது.
இந்தத் தாக்குதல்கள் ஈரானின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு இலக்குகளை உள்ளடக்கிய முன்கூட்டியே தாக்கும், துல்லியமான, ஒருங்கிணைந்த தாக்குதல் எனவும் ஈரானால் தெரிவிக்கப்பட்டது.
אנחנו במערכה גורלית על קיומנו. אנחנו נאבק עד שנשיג את הנצחון >> pic.twitter.com/6VGzigZd4f
— Benjamin Netanyahu - בנימין נתניהו (@netanyahu) June 14, 2025
இந்நிலையில், இஸ்ரேலின் இந்த திட்டமிட்ட தாக்குதலுக்கு ஈரான் பதிலளிக்கும் முகமாக நேற்றைய தினம் இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தியது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




