இஸ்ரேல் வெளியிட்ட சர்ச்சைக்குரிய வரைப்படம்!
ஈரான்- இஸ்ரேல்(Israel) தாக்குதலிற்கு பின்னர் ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் வரம்பைக் காட்டும் வரைபடம் ஒன்றை இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) வெளியிட்டிருந்தன.
நேற்று(13) அதிகாலை முதல் ஈரான் மீது ஒப்பரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல் மீது தாக்குதல்
பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுத்துள்ளது.
இந்த நிலையில், ஈரான் ஒரு உலகளாவிய அச்சுறுத்தல்; இஸ்ரேல் முடிவல்ல, இது வெறும் ஆரம்பம்" என்று கூறி IDF இந்த வரைபடத்தை வெளியிட்டிருந்தது.
குறித்த வரைப்படத்தில் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தானின் பகுதியாகவும், வடகிழக்கு இந்தியா நேபாளத்தின் பகுதியாகவும் தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
விளக்கப் படம்
சமூக வலைத்தளங்களில் இந்தியப் பயனர்கள் தங்கள் ஆட்சேபனைகளைத் தெரிவித்ததையடுத்து, IDF வெளியிட்ட விளக்கத்தில், "இந்த வரைபடம் பிராந்தியத்தின் ஒரு விளக்கப் படம்.
இது எல்லைகளைத் துல்லியமாக சித்தரிக்கத் தவறிவிட்டது. இந்த படத்தால் ஏற்பட்ட எந்தத் தவறுக்கும் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வரைபடத்தில் ரஷ்யா , உக்ரைன், சீனா, சூடான் உள்ளிட்ட 15 நாடுகளும் ஈரானின் ஏவுகணை வரம்பிற்குள் உள்ளன எனக் காட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.





கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் ரஜினியின் கூலி.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
