பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு! சம்பவம் குறித்து பொலிஸார் வெளியிட்ட தகவல்கள்
பாணந்துறை, பின்வத்த, மாதுப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள வீடொன்றின் மீது இன்று (25) பிற்பகல் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்காக மில்லிமீட்டர் 9 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்தில் சுமார் 10 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri
