கச்சதீவு தொடர்பில் புதிய உடன்படிக்கை இல்லை
கச்சதீவு (Kachchatheevu) பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கை மற்றும் இந்தியாவிற்கு (India) இடையில் எவ்வித புதிய உடன்படிக்கையும் பேச்சுவார்தைகளும் இடம்பெறவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் ஒரு விரிவான உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
வெளியான செய்தி
குறித்த செய்தியில், பாக்கு நீரிணை கடற்பரப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை தொடர்பான விவகாரங்கள் மற்றும் கச்சதீவு பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் ஒரு விரிவான உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே, அவ்வாறான பேச்சுவார்த்தைகள் எதுவும் இடம்பெறவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் உயிரிழப்பு - முன்னரே எச்சரித்த குடும்ப உறுப்பினர் News Lankasri
145 ஓட்டங்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: 585 ஓட்டங்கள் விளாசிய எதிரணி News Lankasri